
சுல்தான் தி வாரியர் பட விஷயத்தில் ரஜினியின் மகள் சவுந்தர்யா தடம் மாறுகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் நிறுவனமும், அம்பானியில் அல்டாப் நிறுவனமும் இணைந்து சுல்தான் தி வாரியர் என்ற படத்தை தயாரித்து வருகிறது. பிஸி ஷெட்யூலிலும், மகளுக்காக அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் நடித்துக் கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை ஆரம்பித்த போது படத்தில் இடம்பெறும் கேரக்டர்களில் ரஜினிகாந்தை தவிர மற்ற அனைத்து கேரக்டர்களுமே யாரையும் சாராத அனிமேஷன் பொம்மைகளாகத்தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆக்கர் நிறுவனத்தின் கிராபிக்ஸ் உத்திகளை சுல்தான் படம் மக்களிடையே எடுத்துச் செல்லும் என்று சவுந்தர்யா ரஜினிகாந்தும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சுல்தான் படத்தில் அஞ்சாதே படத்தின் நாயகி விஜயலட்சுமியும் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடந்த சூட்டிங்கிலும் ரஜினியுடன் இணைந்து விஜயலட்சுமி நடித்துள்ளார். இதனை சவுந்தர்யாவின் ஆக்கர் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. இதுபற்றி விசாரிக்கையில், விஜயலட்சுமியையும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் விருப்பமாம். அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத்தான் விஜயலட்சுமியும் சேர்க்கப்பட்டாராம்.
3 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே..!
இப்படியொரு தலைப்பு தேவையா இதுக்கு....
இந்த செய்தி குறித்து துபாய் நண்பர் சிரோன்மணி தனிமடலில் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து தலைப்பை மாற்றியுள்ளேன்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!