
ஏன் இத்தனை குசேலன் என்று வடிவேலு பாணியில் கேட்காதீர்கள். இன்னும் 15 நாட்களுக்கு குசேலன் பற்றிய செய்தாதான் பல வலைபதிவுகளை நிரப்பிக் கொண்டிருக்கப் போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதனால்தான் இப்படியரு தலைப்பு பில்டப்பு...!
சரி விஷயத்துக்கு வருகிறேன்...! குசேலன் படத்துக்கான ரசிகர்கள் டிக்கெட் குறைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் சத்தியநாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குசேலன் படத்தை வெளியிட்ட முதல் வாரத்திலேயே பார்க்க வேண்டும் என்று மன்றத்தினர் காத்திருப்பதை போல பொது மக்களிடமும் அந்த ஆவல் இருக்கிறது. மன்றத்தில் இல்லாதவர்கள் ஆவலையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற நிர்ப்பந்தமும், விருப்பமும் தியேட்டர்காரர்களுக்கு இருப்பதை அறிவோம். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இதற்கு முன்பு வெளிவந்த படங்களுக்கு தலைமை மன்றம் மூலம் அளித்து வந்த டிக்கெட்டுகளில் 50 சதவிகிதம் மட்டுமே குசேலன் படத்திற்கு அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சத்தியநாராயணன் கூறியியுள்ளார்.
குறிப்பு : இந்த செய்திக்கு குசேலன் டிக்கெட் குறைப்பு என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். என்ன செய்ய நம்ம வாசக நண்பர்கள் வித்தியாச விரும்பிகளாயிற்றே... அதனால்தான் குசேலன் குசேலன் குசேலன் குசேலன் குசேலன் என்று தலைப்பிட்டு விட்டேன்.
6 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
மேல இருக்க படத்த பார்த்தா, நயன் தாராவோட பணத்திமிற அடக்கி, காதல் வலையில் விழவைத்து பின் அட்வைஸ் பண்ணி காதலை நிராகரித்து வேறு ஒருவரை கல்யாணம் பண்ணுவார் போலருக்கு. வேற கதைய யாரும் அவருக்கு சொல்றதில்லையா, இல்ல அவரோட முந்தய படங்கள அவர் பாக்கறதில்லையா?
Hai,
Ticket cost is not reduced.
Only tickets reduced
//மோகன் கந்தசாமி said...
மேல இருக்க படத்த பார்த்தா, நயன் தாராவோட பணத்திமிற அடக்கி, காதல் வலையில் விழவைத்து பின் அட்வைஸ் பண்ணி காதலை நிராகரித்து வேறு ஒருவரை கல்யாணம் பண்ணுவார் போலருக்கு. வேற கதைய யாரும் அவருக்கு சொல்றதில்லையா, இல்ல அவரோட முந்தய படங்கள அவர் பாக்கறதில்லையா?//
மோகன் கந்தசாமி என்ன டென்ஷன் ஆகி வயிறு எரிந்தாலும் சரி நாங்க இன்னும் கொஞ்சம் பெட்ரோல் ஊத்தி விட்டு திரும்ப அப்படி தான் படம் எடுப்போம் ஹி ஹி ஹி
//மோகன் கந்தசாமி said...
மேல இருக்க படத்த பார்த்தா, நயன் தாராவோட பணத்திமிற அடக்கி, காதல் வலையில் விழவைத்து பின் அட்வைஸ் பண்ணி காதலை நிராகரித்து வேறு ஒருவரை கல்யாணம் பண்ணுவார் போலருக்கு. வேற கதைய யாரும் அவருக்கு சொல்றதில்லையா, இல்ல அவரோட முந்தய படங்கள அவர் பாக்கறதில்லையா?
//
வருகைக்கு நன்றி மோகன் கந்தசாமி... உங்களுக்கு கற்பனை திறன் நல்லாவே இருக்கு என்பது இந்த பின்னூட்டத்தின் மூலம் உறுதியாகிவிட்டது.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!