
பாண்டி படம் பிளாப் என்றாலும் எதிர்பார்த்ததை விட நன்றாகவே ஓடியிருக்கிறது என்று கூறும் நடிகர் ராகவா லாரன்ஸ், அடுத்து ராஜாதி ராஜா படத்தில் நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவாலாரன்ஸ், சூப்பர் ஸ்டாரின் பட தலைப்பின் நடிப்பதை பெருமையாக கருதும் அதே நேரத்தில் இன்னொரு புதுமையையும் புகுத்துகிறாராம். அதாவது படத்தில் கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி, மும்தாஜ், கிரண், காம்னா, அஞ்சாதே ஸ்னிக்தா, சமிக்ஷா ஆகிய கதாநாயகிகளை தன்னுடன் ஆட வைக்கப் போகிறாராம்.
இதிலென்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா? படத்தில் நடிகைகளுக்குமே முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்கிறார் லாரன்ஸ். படம் வந்தபிறகுதானே தெரியும்!
2 comments:
நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே..!
your blog is very nice mr.
-kkseker
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!