
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அமெரிக்காவில் கட்அவுட் வைக்கப்பட்டிருப்பது தெரிந்த சங்கதிதான். அமெரிக்காவில் ஒரு தமிழ் நடிகருக்கு கட்அவுட் வைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. இது எப்படி சாத்தியமானது? என்பது பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனமும், செவன் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் குசேலன். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராகவே நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான கட்அவுட்தான் அமெரிக்காவை அலங்கரித்து வருகிறது. 25 அடி உயத்தில் கட்அவுட் வைப்பதற்கு காரணம் அமெரிக்கா வாழ் தமிழர்கள்தானாம். அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள். நம்மூரில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது போலவே அவர்களும் குசேலன் ரீலிஸ் எப்போது என்று எதிர்பார்த்து வருகிறார்கள். அங்குள்ள மீடியாக்களில் தமிழ் சினிமா பற்றிய செய்திகள் வருவதில்லை என்பதால் பலர் தியேட்டருக்குள் வந்து குசேலன் எப்போது ரீலிஸ் என்று கேட்டுள்ளனர்.
இதனால் ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் குசேலன் படம் ஆகஸ்ட் 1ம்தேதி ரீலிஸ் ஆகவிருக்கிறது என்று அறிவிப்பு பலகையுடன் 25 அடி உயரத்தில் பிரமாண்ட வினயல் கட்அவுட்களையும் வைத்ததாக குசேலன் படத்தின் அமெரிக்க விநியோகஸ்தர் ஜெயவேல்முருன் தெரிவித்துள்ளார்.
3 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Its really Americans looking for this movie BS!!!
தலை பட்டய கிளப்ப வாழ்த்துக்கள்
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!