
குசேலன் படத்தை பெங்களூருவில் திரையிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று குசேலன் படக்குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒகேனக்கல் பிரச்னையில் கர்நாடகாவை கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த பிரச்னைக்கு காரணமானவர்களை அடிக்க வேண்டும் என்று காட்டமாக கூறினார். இது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பை சேர்ந்தவர்களை பெரிய மன கஷ்டத்தை கொடுத்துள்ளதாம். இதனால் ரஜினிகாந்த கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அப்போதில் இருந்தே வேதிகே அமைப்பு கோரி வருகிறது,
இந்நிலையில் குசேலன் படத்தை கர்நாடகாவில் திரையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ள வேதிகே அமைப்பு, மீறி திரையிடப்படும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் குசேலன் படத்தை வாங்கியுள்ள தியேட்டர்களின் உரிமையாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையில் கன்னட வெறியர்களின் இந்த மிரட்டலைத் தொடர்ந்து குசேலன் திரையிடப்படவுள்ள தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. பாதுகாப்பு அதிகரித்திருப்பதால் குசேலன் படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1ம் தேதி குசேலன் படம் உலகமெங்கிலும் ரீலிஸ் ஆகும் என்று குசேலன் படக்குழுவை சேர்ந்தவர்கள் கூறினார்கள்.
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
படம் வெளியிட்ட பிறகு எப்படியும் திரை அரங்கை நொறுக்க போறாங்க
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!