CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-04-30

ரஜினிக்கு ஜோடியாக ஐஸ் நடிப்பதில் மீண்டும் சிக்கல்

சிவாஜி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், இயக்குனர் ஷங்கரும் இணையும் படம் ரோபோ. இந்த படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் மிக மிக பிரமாண்டமாக தயாராக இருப்பதாக படத்தை தயாரிக்கும் ஐங்காரன் பிலிம்ஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. பின்னர் அவர் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாகவும், அதனால் ரோபோ படத்தில் நடிக்கவில்லை என்றும் செய்திகள் பரவின. இந்த செய்திகளை மறுத்த ஐஸ்வர்யா ராய், தான் ரஜினியுடன் நடிக்கப்போவதை உறுதி செய்தார்.

இந்நிலையில் ரோபோ படத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய் நடிப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் டைரக்டர் மணிரத்தினம் ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சனை வைத்து ஒரு புதிய படம் எடுக்க முடிவு செய்திருப்பதுதான். மணிரத்தினத்தின் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய்தான் நாயகியாம். இந்த 2 படங்களின் சூட்டிங்கும் வருகிற செப்டம்பர் மாதம் துவங்குகிறது. இதனால் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதா, கணவர் ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பதா என்ற குழப்பத்தில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாராம்.

3 comments:

Anonymous said...

ஐஸ்வர்யா ராய் வாழ்க... ஐஸ்வர்யா ராய் வாழ்க... ஐஸ்வர்யா ராய் வாழ்க... ஐஸ்வர்யா ராய் வாழ்க... ஐஸ்வர்யா ராய் வாழ்க...

சரவணகுமரன் said...

தலைவா, கமல்கிட்ட சொல்லி ஐஸ்வர்யா ராய் மேக்கப்க்கு ஏற்பாடு பண்ணுங்க.

Samuthra Senthil said...

//சரவணகுமரன் said...
தலைவா, கமல்கிட்ட சொல்லி ஐஸ்வர்யா ராய் மேக்கப்க்கு ஏற்பாடு பண்ணுங்க.//

சொல்லிட்டா போச்சு சரவணகுமார்... ஹி ஹி..!

பின்னூட்டத்துக்கு நன்றி!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!