CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-04-30

இதுதான் தசாவதாரம் கதை


நடிகர் கமல்ஹாசன் 10 வித்தியாசமான கெட்அப்களில் நடித்துள்ள படம் தசாவதாரம். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்பிரமாண்ட படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்டு தசாவதாரம் ஆடியோவை வெளியிட்டார். தமிழக முதல்வர் கருணாநிதி முதல் ஆடியோவை பெற்றுக் கொண்டார். ரூ.10 கோடி செலவில் நடந்த இந்த பிரமாண்ட விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், மம்முட்டி உள்பட இந்தியாவின் பிரபல நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தசாவதாரம் ஆடி‌யோவை வெளியிட வந்த ஹாலிவுட் சூப்பர் நடிகர் ஜாக்கிசான், இந்திய நடிகர்களை மதிக்கவில்லை, இந்திய தண்ணீரை குடிக்கவில்லை, மல்லிகா ஷெராவத்தை தவிர வேறு யாரையும் தனது அறைக்குள் அனுமதிக்கவில்லை, இந்திய உணவுகளை வெறுத்தார் என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்ததும், அதற்கு அதிரடியா ஜாக்கிசான் பதில் அளித்ததும் வேறு கதை.

சரி விஷயத்துக்கு வருவோம். தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி தசாவதாரம் படத்தை புகழ்ந்து தள்ளினார். நடிகர் ஜாக்கிசானும் தன் பங்குக்கு தசாவதாரத்தில் கமல்ஹாசனின் நடிப்பு பற்றி பாராட்டி பேசினார். நடிகர் விஜய் பேசும்போது, தசாவதாரம் படத்‌தின் டிரைலரை பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன், என்றார். இந்த விழாவில் ஏற்புரையாற்றிய நடிகர் கமல்ஹாசன், தசாவதாரம் படத்தைப் பற்றிய தகவல்களை இதுவரை ரகசியம் காத்து வந்தோம். இனி மெல்ல மெல்ல தசாவதாரம் பற்றிய செய்திகள் வெளியாகும் என்று கூறினார்.

இந்நிலையில் தசாவதாரம் படத்தின் கதை வெளியாகி கோலிவுட்டை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. 14ம் நூற்றாண்டு கதைதான் தசாவதாரம் படத்தின் கதையாம். 14ம் நூற்றாண்டில் துவங்கும் இப்படத்தில், நாராயணன், சிவன் இருவரையும் வழிபடும் பக்தர்களுக்கு இடையே பிரச்னை ஏற்படுகிறது. அந்தணரான கமல்ஹாசனிடம், சிவனை வணங்க சொல்லி மன்னன் வற்புறுத்துகிறான். அதற்கு கமல் முடியாது என்று மறுக்கிறார். இதனால்‌ ஆவேசப்படும் மன்னன், கமல்ஹாசனின் கை, கால்களை கட்டி கடலில் தூக்கி எறிய உத்தரவிடுகிறான். அடுத்தடுத்து பிறவிகள் எடுக்கும் கமல்ஹாசனை சிவனா? நாராயணனா? என்ற பிரச்னை தொடர்கிறது. காலத்திற்கு ஏற்றபடி எதிர் எதிராக நின்று மல்லுகட்டுவதுதான் மொத்த கதையும். படத்தில் கமல் எடுக்கும் 10 அவதாரங்களிலும் ஒரு ரங்கநாதர் சிலையும் இடம்‌பெறுமாம். நடிகை அசின் பிராமண பெண்ணாக வந்து ரங்கநாதரை வழிபடுகிறார். படத்தில் மல்லிகாஷெராவத்தின் கிளுகிளுப்புக்கு பஞ்சமே இருக்காதாம்.
தசாவதாரம் படத்தின் கதையில் க்ளைமாக்ஸ் என்ன என்பதை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்களாம் தசாவதாரம் படக்குழுவினர். தசாவதாரம் கதை வெளியானதால் கோலிவுட்டில் இதுபற்றியே பரபரப்பாக பேசப்படுகிறது.

3 comments:

ஜோ/Joe said...

ஏம்பா ! தினமலரிலிருந்து அப்படியே சுட்டு போட்டுகிட்டு எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட் வேறயா?

Samuthra Senthil said...

நண்பர் ஜோ...

இது தினமலரில் இருந்து அப்படியே சுட்டது இல்லை என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நானும் அதை படித்தேன். நீங்கள் ஏன் நிருபர் போலவே தினமலரில் போட்டிருக்கிறார்கள் என்று எண்ணக் கூடாது? உங்கள் கமெண்ட்க்கு நன்றி! மீண்டும் வாருங்கள். இதுபோல சர்ச்சை இல்லாத செய்திகளை தருகிறேன்.

டோமரு. said...

சோக்காகீதுப்பா...
உன் டகால்டிவேல..
சரி..சரி நடத்து.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!