
சினிமா உலகில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் 95 சதவீதம்பேர் தங்களது பெயர்களை கண்டிப்பாக சினிமாவுக்காக மாற்றியிருப்பார்கள். (ஒரு சிலர் ராசிக்காக பல தடவை பெயர் மாற்றுவார்கள்). கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் மதுரைக்கார பெண்ணாக, பாவாடை&தாவணியில் நடித்த நடிகை மீனாட்சிக்கும், மீனாட்சி என்பது ஒரிஜினல் பெயர் இல்லை. அவரது ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா? பிங்கி சர்க்கார்.
பெயர் மாற்றம் குறித்து மீனாட்சி கூறுகையில், கருப்பசாமி குத்தகைதாரர் ஷ¨ட்டிங்கிற்காக மதுரை போனப்ப மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போனேன். அப்போதே என் பேரையும் மீனாட்சின்னு மாத்திக்கிட்டேன். ரொம்ப ராசியான இந்த பேர் எனக்கு பிடிச்சிருக்கு. கைநிறைய படங்களோட நடிச்சிட்டிருக்கேன். இது எனக்கு அடிச்ச லக்கி பிரைஸ். அதனாலே மீனாட்சியாகவே ஆகிட்டேன். எனது பழைய பெயர் எனக்கே மறந்து போய் விட்டது, என்கிறார்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!