
நடிகை காவ்யா மாதவனின் பெற்றோர் காவ்யாவுக்கு நல்ல வரண் அமைய வேண்டி கோயிலில் மாங்கல்ய பூஜை நடத்தினார்கள்.
காசி, சாது மிரண்டா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை காவ்யா மாதவன். கேரளாவை சேர்ந்த இவருக்கு இப்போது வயது 25. வயது ஏறிக்கொண்டே போவதால் காவ்யாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து மாப்பிள்ளை தேடும் படலம் நடந்து வருகிறது. இந்நிலையில் நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டி, மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரத்தில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு காவ்யா மாதவன் மற்று அவரது பெற்றோர் சென்றனர்.
இக்கோயிலில் உள்ள விநாயகருக்கு தொடர்ந்து 3 வருடம் மாங்கல்ய பூஜை நடத்தினால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இடையிலேயே திருமணம் நடந்தாலும் தொடர்ந்து 3 வருடம் பூஜை நடத்த வேண்டும். அதன்படி விநாயகருக்கு காவ்யாவின் குடும்பத்தினர் பூஜை நடத்தி வழிபட்டனர்.
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!