
மர்மயோகி படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
தசாவதாரம் போலவே கமல்ஹாசனின் நீண்ட நாள் கனவுப்படம் மர்மயோகி. இந்த படத்துக்காக கமல்ஹாசன் தாடியைக் கூட எடுக்காமல் இருந்து வருகிறார். படத்தின் கதையை தானே எழுதி, இயக்கி, நடிக்கும் கமல்ல பிரமிட் சாய்மீரா நிறுவனத்துடன் இணைந்து தானே தயாரிப்பதற்கான வேலைகளிலும் இறங்கியிருக்கிறார்.
பல மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு இன்னமும் முடிவாகவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மும்பையில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள கமல், மர்மயோகி என்றதும் மர்மமான கதையாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது பழங்காலத்து கதைதான். ஆனால் புதுமையான கதை. இந்த படத்தை எடுத்து முடிக்க எவ்வளவு செலவாகும் என்று இன்னமும் என்னால் கணிக்க இயலவில்லை. கண்டிப்பாக தசாவதாரத்தைப் போல இந்த படமும் உலகத்தரத்தில் இருக்கும், என்று கூறியுள்ளார்.
1 comments:
தசாவதாரம் போலவேவா? உலகத்தரத்த கடவுள் தான் காப்பாத்தணும்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!