
ரம்பா எப்போதுமே விளையாட்டு பிள்ளை போலதான் பேசுவார். அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார் என்ற செய்தியை விவரம் அறிந்தவர்கள் யாரும் நம்ப மாட்டார்கள். உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்து விட்டு, வாய்ப்புகள் குறைந்ததால் போஜ்பூரி பக்கம் போனவர் கடந்த சில மாதங்களாக சென்னையில் டேரா போட்டிருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் ரம்பா ஞாயிறன்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதல் தோல்வியென்றும், அதனால் தற்கொலை முயற்சி செய்ததாகவும், அவரை காப்பாற்றி உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் செய்திகள் பரவின.
ஆனால் உண்மையிலேயே உணவு ஒவ்வாமை காரணமாக ரம்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விசயத்தை கேள்விப்பட்டு நாமும் வடபழனியில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தோம். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். நேற்று பிற்பகலில் ரம்பா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். வழக்கம்போல கலகலப்புடன் இருந்த ரம்பாவுடன் ஒரு ஜாலி பேட்டி:
ஏன் ரம்பா இந்த விபரீத முடிவு?
அய்யோ சார்... என்ன பார்த்தா தற்கொலை பண்ற பொண்ணு மாதிரியா இருக்கு. நான் யாரையாவது கொல்லாம இருந்தா சரிதான்.
எனக்கு நீங்க தற்கொலை முயற்சி பண்ணதாத்தானே மெசேஜ் வந்துச்சி?
அதுக்கு நான் என்ன பண்ண முடியும். ஒரு நடிகை ராத்திரியோட ராத்திரியா மருத்துவமனையில் அட்மிட் ஆனால் இப்படித்தான் பீதிய கிளப்பி விடுவாங்க போலிருக்கு.
யார் வதந்தியை கிளப்பினதுன்னு தெரியுமா?
வதந்தியை பரப்புவோர் யாராக இருந்தாலும் அவங்களுக்கு ஒன்றை சொல்லிக்க விரும்புறேன். அவங்க வீட்டில் எல்லாம் சகோதரிகள் இருக்கிறார்கள் என்று நினைத்து செயல்பட்டாலே போதும். இந்த மாதிரியான சில்லியான செயல்களில் இறங்க மாட்டார்கள்.
உண்மையில் என்னதான் நடந்தது?
நான் இப்போது விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்துக்காக கடந்த ஒரு மாதமாக உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தேன். இந்த நேரத்தில் கடந்த வியாழக்கிழமை சாய் பாபாவுக்காகவும், வெள்ளிக்கிழமை வரலட்சுமிக்காகவும், சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்திக்காகவும் விரதம் இருந்தேன். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல டயட் உணவு. ஏனோ தெரியவில்லை, அந்த உணவு எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் மருத்துவமனையில் சேர்ந்தேன். சிகிச்சை முடிந்ததும் இப்போ உங்க முன்னாடி வழக்கமான ரம்பாவா இருக்கிறேன்.
அப்போ காதல் இல்லியா?
அய்யய்யோ.. இது என்னடா வம்பா போச்சு. நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படியே காதலிச்சாலும் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நான் கோழை இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு ரம்பா கூறினார்.
1 comments:
//யார் வதந்தியை கிளப்பினதுன்னு தெரியுமா?//
எனக்கு தெரியும் .
சன் டிவி குரூப் .
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!