
உலகமே போற்றும் வித்தியாசமான நடிப்பில் உலக நாயகன் கமல்ஹசன் 10 அவதாரம் எடுத்துள்ள தசாவதாரம் படத்தின் ரீலிஸ் தேதி உறுதியாகியுள்ளது. ஜுன் 6ம் தேதி படம் ரீலிஸ் ஆகும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், பிரிண்ட் போடும் பணி மற்றும் டப்பிங் பணிகளால் ரீலிஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஜுன் 12ம் தேதி தசாவதாரம் படம் உலகமெங்கும் ரீலிஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தசாவதாரம் படம் இந்தியாவில் ஜுன் 13ம் தேதி ரீலிஸ் ஆகும் என்று ஆஸ்கார் நிறுவனம் அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஜுன் 12ம் தேதி வெளிநாடுகளில் ரீலிஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டென்னிஸ் உலகின் இளம்புயல் என்று வர்ணிக்கப்படும் சானியா மிர்சா சினிமா உலகிலும் கால்பதிக்கவுள்ளார்.
பெரும்பாலான இளசுகளுக்கு டென்னிஸ் ஜுரம் வருவதற்கு காரணமாக இருப்பவர் சானியா மிர்சா. சின்னத்திரையில் மட்டும் இவரது (டென்னிஸ்) ஆட்டத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள், இனி பெரிய திரையிலும் ரசிக்கப் போகிறார்கள். சானிமா டென்னிஸ் களத்தில் குதித்து பிரபலமானதும் நம்ம ஊர் இளம் நாயகர்களின் ஒருவரான சிம்பு, தனது படத்தில் நடிக்குமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் அம்மணி சாரி... சொல்லி அனுப்பி விட்டார். இதையடுத்து விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கிய சானியா மிர்சா, இப்போது சினிமா உலகிலும் கால் பதிக்க சம்மதித்துள்ளார்.
ஆம்! சானிமா மிர்சா முதன் முதலாக தெலுங்கு படமொன்றில் நடிக்க ஓ.கே. சொல்லியிருக்கிறார். நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சானியா. சானியா மிர்சா இந்த படத்தில் தோன்றுவது வெறும் 5 நிமிடங்கள்தான் என்பது வருத்தமான செய்தி என்கிறபோதிலும், விரைவில் அவர் கதாநாயகியாக களமிறங்குவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது தெலுங்கு திரையுலகம்.

ஒரு காலத்தில் சக்கை போடு போட்டு படம் காதலிக்க நேரமில்லை. அந்த காலத்திலேயே காதலை பறைசாற்றிய இந்த படம் இந்தக்கால மாற்றங்களுடன் ரீமேக் ஆகவிருக்கிறது. தற்போது வெடிகுண்டு முருகேசன், குசேலன், இந்தி டாக்ஸி ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகர் பசுபதி, இம்மூன்று படங்களுக்கு பிறகு காதலிக்க நேரமில்லை ரீமேக் படத்தில் நடிக்கவிருக்கிறார். டைரக்டர் மனோபாலாதான் இந்த படத்தை இயக்குகிறார். ஒரிஜினல் காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமன் ஏற்றிருந்த வேடத்தில் பசுபதி நடிக்கவுள்ளார். இதுதவிர, டி.எஸ்.பாலையாவின் கேரக்டரில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், நாகேஷ் கேரக்டரில் வடிவேலுவும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தில் நடிக்கவிகருக்கும் கதாநாயகிகள் குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லையாம்.