சிம்புவுக்கும் த்ரிஷாவுக்கும் காதல் என்று கோடம்பாக்கத்தில் புதிதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதற்கு த்ரிஷா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது :-
எனக்கும் நடிகர் சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாக சிலர் வீண் வதந்தியை பரப்பி வருகிறார்கள். இதுபற்றி நான் பல தடவை விளக்கம் அளித்து விட்டேன். ஆனாலும் இந்த வதந்தி நின்ற பாடில்லை.
சினிமாவில் எனக்கு வேண்டாத சிலர்தான் என்னைப் பற்றி அடிக்கடி கிசுகிசு பரப்பி வருகிறார்கள். கிசுகிசு மூலம் என் மார்க் கெட்டை குறைத்து விட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். அவர்களது இந்த எண்ணம் ஈடேறாது.
நான் இதுபோல் எத்த னையோ சர்ச்சைகளைப்பார்த்து விட்டேன். தொடக் கத்தில் இந்த மாதிரி சர்ச்சை- வதந்தியை கிளப்பிய போது மிகவும் பயந்து போனேன். ஆனால் தற்போது அதை பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.
நல்ல விமர்சனம் என்றால் ஏற்றுக்கொள்வேன். தீயவிமர்சனம் என்றால் கண்டுகொள்ளமாட்டேன்.
சமீபகாலமாக சில ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகைகளுக்கு கோவில் கட்டுகிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கடவுளுக்கு மட்டும்தான் கோவில் கட்ட வேண்டும். நடிகைகளுக்கு கோவில் கட்டுவது கடவுளை கேவலப்படுத்துவது போல் உள்ளது. எனவே ரசிகர்கள் நடி கைகளுக்கு பதில் தங்களுக்கு பிடித்த கடவுளுக்கு கோவில் கட்டலாம்.
தற்போது என்னிடம் ஒரு சிலர் எப்போது திருமணம் செய்யப் போகிறீர்கள்?Ó என்று கேட்கிறார்கள். நான் தற்போது திருமணம் பற்றி சிந்திக்கவில்லை. நடிப்பில்தான் அதிககவனம் செலுத்தி வருகிறேன். சினிமா வில் சாதித்த பிறகு தான் திருமணம் செய்வேன். எனது கணவர் அதிகம் சம்பாதிப்ப வராக இருக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. அவர் நல்ல மனிதராக என் கருத்துக்கு மரியாதை தருபவராக இருந்தால் போதும்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!