CINEMA NIRUBAR WELCOMES YOU

2009-06-08

சுயசரிதை எழுதுகிறார் ஸ்லம்டாக் ரூபினா அலி


ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரூபினா அலி, தனது வாழ்க்கையை சுய சரிதமாக எழுதி வெளியிடப் போகிறாராம். 9 வயதே நிரம்பிய சிறுமியான ரூபினா, பிறந்தது, வளர்ந்ததெல்லாம் வறுமை நிறைந்த மும்பை சேரி பகுதியில்தான். இந்த 9 வயதுக்குள் அவருக்கு நேர்ந்த அனுபவங்களையே தனிப் புத்தகமாக்கி பிரபல டிரான்ஸ்வேர்ல்டு பதிப்பகத்தார் வெளியிடப் போகிறார்கள். இந்தப் புத்தகம் மூலம் வரும் பணத்தில் சிறுமி ரூபினாவுக்கு தேவையான உதவிகளை செய்வதாக பதிப்பகத்தார் கூறியுள்ளனர். 'ஒரு சேரிச் சிறுமியின் கனவு: நட்சத்திரங்களுக்குள் என் பயணம் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!