அடுத்தடுத்து அஜித்தை தாக்கி பேட்டியளித்து வரும் டைரக்டர் கவுதம் மேனனுக்கு நடிகர் அஜித் அதிரடி பதில் அளித்துள்ளார். புதிய படத்தில் நடிப்பது தொடர்பாக நடிகர் அஜித்துக்கும், டைரக்டர் கவுதம்மேனனுக்கும் மோதல் உருவாகியிருக்கிறது. அஜித்துக்கு எதிரான பல கருத்துக்களை கவுதம் மேனன் தெரிவித்து வருகிறார். இதுவரை மூன்று முறை மீடியாக்களில் அஜித்தை நேரடியாக விமர்சித்து பேட்டியளித்திருக்கிறார் கவுதம் மேனன். ஆனால் அஜித் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்காமல் மவுனம் காத்து வந்தார்.
இந்நிலையில் மவுனத்தை கலைத்து கவுதம் மேனனுக்கு அதிரடி பதிலடி கொடுத்திருக்கிறார் அஜித். அவர் அளித்துள்ள பேட்டியில், இனிமேல் அஜித் எனக்குத் தேவையில்லை என்று கவுதம் மேனன் சொல்லியிருக்கிறார். சினிமாவில் நான் இல்லாமல் 10 படங்களை கவுதம் இயக்கிவிட்டார். அவர் இல்லாமல் நானும் 50 படங்களை முடித்துவிட்டேன். இதுதான் என் சிம்பிள் பதில். கார் ரேஸில் ஆர்வம் இருப்பதால், அதற்காக வெளிநாடு போவதால், சினிமாவில் கவனம் செலுத்தலைன்னு சொல்றது அபத்தம். நான் எதில் ஈடுபட்டாலும் அதிலேயே மூழ்கிவிடுவேன். அது என் இயல்பு. கார் ரேஸுக்குப் போனதால் ஓர் இடைவெளி ஏற்பட்டது உண்மைதான். அதற்காக அதிலேயே இருந்துவிடுவேன் என்று அர்த்தமல்ல. இதோ, மீண்டும் நான் வந்து விட்டேன், என்று கூறியுள்ளார்.