
குசேலன் தோல்வியையும், எந்திரனாக உருவாகவிருக்கும் ரோபோ படத்தையும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று டைரக்டர் ஷங்கர் கூறியுள்ளார். மும்பையில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ரோபோ படம் எந்திரன் என்ற பெயரில் எடுக்கப்படவிருக்கிறது. இந்த படத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க ஹாலிவுட் பாணியில் உருவாகும் என்பதில் ஐயமில்லை. ரஜினிகாந்த் நடித்த குசேலன் படம் தோல்வியடைந்ததால் ரோபோ படத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சிலர் பேசுகிறார்கள். அப்படி எதுவும் நடக்காது. குசேலன் நல்ல படம்தான். தேவையற்ற சில சர்ச்சைகள் உருவாகி விட்டது.
ரோபோ படம் சிவாஜி படத்தை விட பல மடங்கு தொழில்நுட்ப யுத்திகளுடன் உருவாகிறது. அமெரிக்காவில் தமிழ் சினிமா மட்டுமல்ல வேறு எந்த மொழி சினிமாக்களும் கண்டிராத லொக்கேஷன்களில் சூட்டிங்கை நடத்தவிருக்கிறோம். தமிழ் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை எங்கள் எந்திரன் கண்டிப்பாக தருவான், என்று கூறியுள்ளார்.
1 comments:
//இனி வழக்கம்போல எமது செய்தி சேவை தொடரும்//
கலக்குங்க..
நிருபர் தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விட்டதா..
டேய்! நாராயணா! இந்த வைரஸ் தொல்லை தாங்க முடியலடா! ஏதாவது மருந்து அடிச்சு கொல்லுங்கடா :-))))
//எனது மறைவுச்சொல் மறைந்து போனதாலும்//
நிருபர் மறைவு சொல் என்பதால் மறைந்து போச்சு போல இருக்கு :-)) ஹி ஹி
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!